கனடிய விமான சேவைகள் மெக்சிக்கோவிற்கான பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியமையின் காரணமாக அந்நாட்டு சுற்றுலா வருமானத்தில் 782மில்லியன் டொலர்கள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதோடு இதுபற்றிய அறிவிப்பொன்றை கனடிய வெளிவிவகாரப் பிரிவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கனடிய வெளிவிவகாரத்துறையில் இந்த விடயம் உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று கனடிய தொலைக்காட்சி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தொடர்ச்சியாக கனடா சகல நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளில் கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.