வியட்நாமின் ஆளும் சமுதாயக் கட்சி 76 வயதான தலைவரான நுயென் பு ட்ராங்கை (Nuen Pu Trang), மூன்றாவது தடவையாகவும் தலைவராக தெரிவு செய்துள்ளது.
இதனடிப்படையில் அவர் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு தலைமைப்பதவியினை வகிக்கவுள்ளார்.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றுள்ள அக்கட்சியின் கொள்கைகளுக்கு மத்தியில் இவருக்கு விசேட விலக்களிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் பல தசாப்தங்களாக நாட்டின் வலிமையான மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார்.