2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு தகுதி உடையவர்களின் பெயர்களை, நோபல் பரிசை வென்றவர்கள் உள்ளிட்டோர் நோபல் பரிசு குழுவிடம் பரிந்துரைத்துள்ளனர்.
இதன்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பர்க் (greta Thunberg), ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (alexey navalny) உள்ளிட்டவர்களின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், உலக சுகாதார அமைப்பு, இனவெறிக்கு எதிரான இயக்கமாக உருவாகிய பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆகியனவும், நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை நோபல் குழு பரிசீலனை செய்து வரும் ஒக்டோபரில் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.