சீனா ஆதரவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவுடனான வெளிநாட்டு உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் காயப்படுத்துகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சீனாவை மையமாகக் கொண்ட கொள்கை தற்போதைய அரசாங்கத்திற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு ஒன்றிணைந்துள்ளது, இரு நாடுகளும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அச்சுறுத்தல் விடுத்தால், இந்த விடயத்தில் இந்தியா தலையிடுவதைத் தடுக்க முடியாது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.