இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செய்ய நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் 1.75 இலட்சம் கோடி ரூபா மதிப்புள்ள பங்குகளையும் விற்பனை செய்வதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதை மக்கள் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில் இந்தியாவின் சொத்துகளை தனது நட்பு முதலாளிகளிடம் விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.