தூத்துக்குடி மாவட்டத்தில், வாகனத்தால் மோதிக் கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபா நிவாரண நிதியும், காயமடைந்த காவலர் சுப்பையாவின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபா நிதியுதவியும் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நேற்று இரவு குடிபோதையில் ஏரல் பகுதியில் சச்சரவில் ஈடுபட்டபோது அங்கு இரவு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அவரைக் கண்டித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
இதன் பின்னர், அவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மீண்டும் தகராறு செய்து கொண்டிருந்ததை பார்த்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர்கள் மீண்டும் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர் உதவி ஆய்வாளர் பாலு மற்றும் மற்றுமொரு காவலர் சென்ற உந்துருளி மீது சிறியரக பாரஊர்தியினால் மோதியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், உதவி ஆய்வாளர் பாலு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.