ஒன்ராரியோ பாடசலைகள் அனைத்திலும் கொரோனா பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வி அமைச்சர் அமைச்சர் ஸ்டீபன் லெஸ் Stephen Lecce) தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகயை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சகல பாடசாலைகளிலும், விசேட பாதுகாப்பு நடவடிக்கைளையும் முன்னெடுப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்களின் நடவடிக்கைகளை பெறுவதற்கும் முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளில் சமூக இடவெளிகளைப் பேணுதல் மற்றும் மாணவர்களின் வகுப்பறைகளுக்கான மாணவர்கள் கொள்ளளவை பராமரித்தல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.