கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்துள்ள ஜேவிபி, இது நாட்டின் இறைமை மற்றும் சுதந்திரம் மீது விழுந்த பாரிய அடி என்றும் தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், சிறிலங்கா மக்களின் முடிவுகளின் தலையிடும் உரிமை இந்தியாவுக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது தூதரக அறிக்கையின் மூலம் சிறிலங்கா மீது அதிகாரம் செலுத்த முனைந்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய அழுத்தங்களின் மூலம், இந்திய – சிறிலங்கா உடன்பாட்டைத் திணித்து, இந்தியப் படைகளை நிறுத்தியதாகவும், காங்கேசன்துறை துறைமுகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், குறிப்பிட்டுள்ள நலிந்த ஜயதிஸ்ஸ, அதுபோன்றே கிழக்கு முனையத்துக்குள்ளேயும், நுழைவதற்கு இந்தியா முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ நாட்டின் தலைவர்கள் அடிபணியக் கூடாது என்றும், அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நாட்டைக் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்