புதிய கொரோனா பாதிப்புக்கள் சர்வதேச அளவில் குறைந்து வருவது, அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என காட்டுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் (Tetros Adanom) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய கொரோனா பாதிப்புகள் சர்வதேச அளவில் குறைவாக பதிவாகி வருகிறது.
சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும் உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது ஊக்கபடுத்தும் வகையிலான செய்திகளை காண முடிகிறது
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையே இந்த செய்திகள் காட்டுகின்றன.
உருமாறிய கொரோனா பரவினாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நமக்கு கடந்த 3 வார எண்ணிக்கை பரிந்துரைக்கிறது என்றார்.