சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலத்தில் கடுமையான துஷ்பிரயோகங்கள் செய்த அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை உக்கிரமாக எதிர்த்து தடுத்து வருகிறது என ஜெனிவாவிற்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் ஜோன் ஃபிஷெர் (John Fischer) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில், சிறிலங்காவில் கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்டும் தீர்மானத்தை நிறைவேற்றுவதுடன் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்களை கண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சிறிலங்கா அரசாங்கத்தின் நீதி மீதான தாக்குதல் இன்றும் எதிர்காலத்திலும் மனித உரிமை மீறல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது,
ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.’
2020 ஆம் ஆண்டில் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கான முயற்சிகள் கணிசமாகக் குறைந்துவிட்டன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்க்ஷ நிர்வாகத்தின் போது நடந்த கொலைகள் மற்றும் வலிந்து காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கும் மூத்த காவல்துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணையகம் அவரது நண்பர்களின் மற்றும் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் தலையிட முயன்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.