தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட திரிபடைந்த கொரோனா தொற்றுக்கு இலக்கான ஒருவர், ஒன்ராறியோவில் முதல் முறையாக இனங்காணப்பட்டுள்ளார்.
B1351 என்ற இந்த கொரோனா தொற்றுக்கு இலக்கானவர், ஒன்ராறியோவின் பீல் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார் சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும், ஒன்ராறியோ தலைமை மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் (david Williams) தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த தொற்று குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.