சென்னை நீலாங்கரை அருகே ஆழ்கடலுக்குள் இன்று திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும், சின்னத்துரை- ஸ்வேதா ஆகியோரே வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நீலாங்கரை அருகே ஆழ் கடலில் 60 அடி ஆழத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமக்கள் இருவரும் திருமண உடை அணிந்து ஒக்சிஜன் கருவியுடன் கடலுக்குள் குதித்து, நீந்தியபடியே இருவரும் மாலைகளை மாற்றி தாலி கட்டி, திருமணம் செய்துள்ளனர்.
கடல் மாசடைதல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டதாக மணமக்கள் தெரிவித்துள்ளனர்.