ஒன்ராரியோவில் மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பான திகதிகளை எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நிலைமைகளை ஆய்வுக்குட்படுத்திய நிலையில் மாகாண அரசு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், ஒன்ராறியோவின் பொதுசுகாதாரத்துறை தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் டேவிட் வில்லியம்ஸ் (David Williams), முதல்வர் டக் ஃபோர்ட் (doug ford) மற்றும் ஒன்ராரியோ கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.