கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பதவியேற்ற பின்னர், அவருடன் பேச்சு நடத்தியுள்ள முதலாவது வெளிநாட்டுத் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார்.
இரண்டு நாடுகளின் தலைவர்களும், கொரோனா தொற்று பரவல் மற்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் இந்த பேச்சுக்களின் போது, சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்களையும், விடுவிப்பதற்கு பைடன் நிர்வாகம் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் கனடிய பிரதமரிடம் கமலா ஹரின் உறுதியளித்துள்ளார்.