இராணுவ ஆட்சி தொடர்ந்தால் மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மியன்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ‘நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான 2016 ஆம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யவதற்கு நாம் தயங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மியன்மாரின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.