வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் எதிர்வரும் சுதந்திரதினத்தன்று முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுதவிர்ப்பு போராட்டத்திற்கு வவுனியா காவல்துறையினர் தடை கோரிய நிலையில் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தி்ருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்களிற்கு நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகள் பரிசீலினை செய்த நிலையில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாகவோ, ஏ 9 பிரதான வீதியிலோ, தபால் காரியாலயம் முன்பாகவும் அத்துடன் வவுனியா மாவட்ட பொலிஸ் பிரதேசத்திலோ ஆர்ப்பாட்டமோ, பாத யாத்திரையோ செய்தால் கொரோனா வைரஸ் நிலைமையின் போது பொது சுகாதாரத்திற்கும் மக்களிற்கும் பாதிப்பு ஏற்படும் என அறிய முடிகிறது.