கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 20 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நாடாளவிய ரீதியில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 7 இலட்சத்து 86 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 745பேரும், கியூபெக்கில் ஆயிரத்து 53 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.