கியூபெக் பிராந்தியத்தின் அன்றாட செயற்பாடுகளை மீள செயற்படுத்தவதற்கு எதிர்வரும் எட்டாம் திகதி முதல் அனுமதி அளிப்பதாக மாகாண அரசு அறிவித்துள்ளது.
எனினும், தொடர்ச்சியாக ஊரடங்கு குறிப்பிடத்தக்க பகுதிகளில் அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தொடர்ச்சியான முடக்கலை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் பகுதி அளவிலான திறப்புக்கு கலந்தாய்வுகளின் பின்னரே தீர்மானிக்கப்பட்டது என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படும் அதேநேரம் பொதுமக்களும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.கியூபெக்கில் பெப்.8இல் தளர்வு