கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய கயான் தந்தநாராயண எனும் வைத்தியர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பதிவான முதல் மருத்துவரின் மரணமாக இவரின் மரணம் பதிவாகியுள்ளது.
கம்பஹாவைச் சேர்ந்த குறித்த வைத்தியர் ராகம வைத்தியசாலையில் பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிறிலங்காவில் இன்று 361 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.