கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதில் ஏற்ற இறக்கமான நிலைமைகள் காணப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
உலகச் சூழலில் அவ்விதமான நிலைமைகளே காணப்படுவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தி திறன் தொடர்பான அடிப்படை விடயமே இந்த விடயங்களின் பின்னணியில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இவற்றை எதிர்பார்த்தே தமது நாட்டின் விநியோக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசாங்கம் ஏழுக்கும் மேற்பட்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.