கனடாவிற்குள் பிரவேசிக்கும் வானூர்திகளின் எண்ணிக்கைகணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் தரைவழி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென போக்குவரத்துறை அமைச்சர் ஒமர் அல்காப்ரா (Omar Alghabra) தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு அமெரிக்க, கனடிய தரைவழி எல்லை மூடப்பட்டிருந்தாலும், அத்தியாவசியத் தேவைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையையும் கணிசமாக குறைக்க வேண்யுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த விடயத்தில் சமஷ்டி அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடும் அவர் இந்த விடயத்தில் சிறந்ததொரு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திள்ளார்