விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்தநிலையில், தமிழக தேர்தல் நடவடிக்கைகளுக்கான பா.ஜ.க பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நடக்கவுள்ள இந்த மாநிலங்கள், பாஜகவினால் இதுவரை வெற்றிபெற முடியாதவை என்பதால், இந்த தேர்தலை கடுமையான சவாலுடன் எதிர்கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.