யாழ்.மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி அற்ற குடும்பங்களுக்கு காணியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 இலட்சம் ரூபா செலவில் 20 பேர்ச்சஸ் காணியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லையென்பது அடையாளங் காணப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களது பூர்வீக இடத்திற்கு அண்மையில் காணிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள மை குறிப்பிடத்தக்கது.