பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்ஸ் (Novavox) தடுப்பூசியை கனடா சுகாதார திணைக்களம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
கனடாவில் நோவாவாக்ஸ் (Novavox) தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான விண்ணப்பம் கடந்த வெள்ளியன்று பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கனடிய பொதுசுகாதாரத்துறையின் தகவல்களின் பிரகாரம், அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் 76 மில்லியன் மருந்தளவு வரை தடுப்பூசி போட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியா வில் அண்மையில் நடைபெற்ற பரிசோதனையில் நோவாவாக்ஸ் (Novavox) தடுப்பூசி 89.3 சதவீதம் செயற்திறனைக் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




