சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிடுவதற்கு தமிழக அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்தில், பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த மாதம் 27-ம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருந்தார்.
அதையடுத்து, ஜெயலிலதா நினைவிடத்தை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர்.
இந்தநிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட தமிழக அரசினால் திடீரென தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து விடுதலையாகி, பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலா வரும் 7-ம் திகதி தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்வதை தடுக்கும் வகையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.