உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் இன்று சீனாவின் வுஹான் ஆய்வகத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
நேற்றையதினம் சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் முதலில் பரவிய இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
சீன விஞ்ஞானிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர். வுஹான் நகரில் உள்ள விலங்குகள் வைத்தியசாலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இன்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் வுஹானில் உள்ள ஆய்வகத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அவர்கள் பலத்த பாதுகாப்புடன் ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.