அதிமுக – அமமுக கட்சிகள் இணைவதற்கு, 100 சதவீதம் வாய்ப்பில்லை என தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தெரிவித்துள்ளார்.
“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னத்தையும் அதிமு.க. வையும் எதிர்த்து போட்டியிட்ட அமமுக, இப்போது அதிமுக.வை கைப்பற்ற முனைப்பதை எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.
சசிகலா வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது. அதிமுக.வில் உறுப்பினராக இல்லாத தினகரன், சசிகலா ஆகியோர் எப்படி அதிமுக.,விற்கு உரிமை கோர முடியும்?. .” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.