சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அதில் அ.தி.மு.க. அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவை ம.தி.மு.க. எடுத்தது.
அதேநிலை சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் திகதி தொடர்பாக தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வர இருக்கிறது. எனவே தேர்தல் நிதி திரட்டும் பொறுப்பை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.