மியான்மரில் இராணுவப் புரட்சியை கண்டிக்கும், ஐ.நா பாதுகாப்புக் குழுவின் கூட்டு அறிக்கையை சீனா தடுத்துள்ளது.
மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை செவ்வாயன்று கூடி ஆராய்ந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், மியான்மர் இராணுவ புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடுவதற்கு, சீனா எதிர்ப்புத் தெரிவித்ததால், பாதுகாப்பு சபையினால் கண்டன அறிக்கை வெளியிடப்படவில்லை.
இது மியான்மரின் உள்நாட்டு பிரச்சினை என்று கருதுவதால் சீனா கூட்டு கண்டன அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
பொருளாதாரத் தடைகள் அல்லது சர்வதேச நாடுகளின் அழுத்தம் மியான்மரில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.