ஒன்ராரியோவில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பாடசாலைகள் மீளவும் இயங்கவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் (Stephen Lecce) தெரிவித்துள்ளார்.
எனினும் பீல் பிராந்தியம், மற்றும் யோர்க் பகுதி பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளை மீளத்திறப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற இறுதிக் கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.