ஒன்ராரியோவில் பாடசாலைகளை மீள இயக்குவதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் ஆலோசனைகளுக்கு அமைவாக வகுப்பறையில் மாகணவர்களின் இருக்கைகளை சமூக இடைவெளிகளுடன் பேணுதல், தொற்று நீக்கம் செய்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு முறைமைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொரோனா பாதுகாப்பின் அடிப்படை விதிகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை, யோர்க் மற்றும் பீல் பிராந்திய பாடசாலைகளை மீள இயக்குவது தொடர்பில் 16ஆம் திகதிக்கு முன்னதாக எவ்விதமான தீர்மான அறிவிப்புக்களும் வெளியாகாது என்றும் திடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.