கனடா மற்றும் அமெரிக்கா இடையே மேம்படுத்தப்பட்ட புதிய உறவுகளின் கீழான வணிக,பொருளாதார உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கன்சர்வவேட்டிக்கட்சி கோரியுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக ஹவுஸ் ஒப் கொமன்ஸில் உள்ள வெளிவிவகார குழுவில் ஆராயப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சமஷ்டி அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதல் கரிசனையையும் அர்ப்பணிப்பியையும் காண்பிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் கன்சர்வேட்டிக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
எனினும், இதுதொடர்பில் ஹவுஸ் ஒப் கொமன்ஸில் ஆராயப்பட்டுள்ளமை தொடர்பாக இதுவரையில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.