சுகாதாரப்பாதுகாப்பு முறைமைகள் கறுப்பினத்தவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்குவதாக அமையவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக, கொரோனா காலத்தில் இந்த நிலைமைகள் மிகவும் மோசமானதாக காணப்பட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்த விடயம் சம்பந்தமான வெளிப்படைத்தன்மையுடனான ஆய்வொன்று அவசியமாக இருப்பதாகவும் அவர்கள் கோரியுள்ளனர்.
குறிப்பிட்டதொரு சமூகத்தினை மையப்படுத்தியதாக இவ்விதமான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையிலான புரிதல் இடைவெளிகளை ஆழப்படுத்துகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.