சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகத்திற்கு வரவுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு வரவேற்பளிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சசிகலா வரும் ஏழாம் திகதி சென்னைக்குத் திரும்புகின்ற நிலையில், அவருக்கு 15 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா பாதிப்பு குணமானதை தொடர்ந்து சுகாதாரத்துறை அறிவுரைப்படி தற்போது ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தலில் உள்ளார்.
இந்நிலையில், சசிகலாவின் ஒரு வார தனிமைப்படுத்தல் வரும் ஆறாம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் அதற்கு அடுத்தநாள் அவர் சென்னைக்கு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.