மியன்மாரில் இணையதளத் சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, மியன்மாரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு உட்பட இணையத்தள சேவை வழங்குனர்களால், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சு, நாட்டின் “ஸ்திரத்தன்மையை” பேணுவதற்காக பெப்ரவரி 7 ஆம் திகதி வரை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள சேவைகள் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், முகநூலை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.