அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால், அமுல்படுத்தப்பட்டிருந்த மிகக் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான மூன்று அரசாணைகளில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன், பிறப்பித்துள்ள முதல் அரசாணையில், ட்ரம்ப் கொள்கையால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான குழுவை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அரசாணையில், அமெரிக்காவில் அடைக்கலம் தேடி அகதிகள் வருவதற்கான மூல காரணங்களை ஆராயவும் அகதிகளை மனிதத் தன்மையுடன் நடத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்குமான குழுவை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு நியாயமான, செயற்திறன் மிக்க முறையில் குடியேற்ற விதிகளை சட்ட அமுலாக்க அமைப்புகள் செயற்படுத்தவதை உறுதி செய்வதற்கான உத்தரவு மூன்றாவது அரசாணையில் இடம் பெற்றுள்ளது