பைசர் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைச் சீர் செய்வதற்கு இன்னமும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் எடுக்கும் என்று தேசிய தடுப்பூசி விநியோக செயற்றிட்டத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் டானி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அடுத்த வாரமளவில் 70 ஆயிரம் வரையிலான மருந்தளவு பைசர் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாகாண ரீதியான விநியோகங்களில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாதபோதும் தடுப்பூசிகளின் இருப்பு இன்மையால் இரண்டாவது தடுப்பூசியைப் பெறவேண்டியவர்களுக்கு எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், மடோர்னா தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதன் பின்னரே மருந்தளவின் மொத்த எண்ணிக்கையை குறிப்பிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.