சமய, காலாசார மொழி அடையாளங்களை அழிக்கும் நோக்கில் அரச திணைக்களங்கள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் அத்துமீறிச் செயற்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வடக்கு நோக்கி வருந்துகொண்டிருக்கின்ற நிலையில் இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டமாகவே பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம் இடம்பெற்று வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் பேரணி வடக்கில் நிறைவடையும் வரை அனைத்துத் தரப்பினரும் பூரண ஆதரவை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம், பொத்தவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டப்பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பேதமின்றி ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளதோடு தடைகளை தாண்டி அனைத்து தரப்பினரும் ஓரணியாய் திரள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.