மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், மியன்மாரில் நிலவும் சூழ்நிலை கவலை அளிப்பதாகவும் ஐ.நா. பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
எனினும், அடுத்த ஒரு வருடம் வரை நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் மீண்டும் அறிவித்துள்ளது.