இந்தியாவின் ரபேல் போர் வானூர்திகளைக் கண்டு அச்சமடைந்துள்ள சீனா, இந்திய எல்லைப் பகுதியில் ஜே 20 போர் வானூர்திகளை நிறுத்தியுள்ளதாக இந்திய வான்படை தளபதி பதாதுரியா தெரிவித்துள்ளார்.
“சீ ன எல்லையில் தேவையான அளவு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எங்கு எந்த சூழலை சமாளிக்கவும் தயாராக உள்ளோம்.
லடாக்கின் கிழக்கு பகுதிக்கு சீனா ஜே -20 போர் வானூர்திகளை கொண்டு வந்து, பின்னர் அவை திரும்பி சென்றன.
இந்தியாவின் ரபேல் போர் வானூர்திங்கள், அங்கு வந்த நிலையில், ஜே 20 போர் வானூர்திங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன.
சீனாவின் நடவடிக்கை மற்றும் திறன் பற்றி எமக்கு தெரியும். இதனால், அதற்கு ஏற்றவாறு, பதிலடி நடவடிக்கை எடுத்தோம்.
இந்தியாவின் ரபேல் போர் வானூர்திகளை கண்டு, சீனா கவலை அடைந்துள்ளது” என்றும் இந்திய வான்படை தளபதி பதாதுரியா குறிப்பிட்டுள்ளார்.