சிறிலங்காவின் சுதந்திர தினாமான இன்று முல்லைத்தீவு மாவட்ட காணாமலாகாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த உறவினர்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுதந்திர தினத்திற்கு எதிராக கருப்புக் கொடிகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் பதாதைகளைத் தாங்கியும் தமது எதிர்ப்பினை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முல்லைத்தீவு எல்லையான கொக்குளாய் பகுதியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.