பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவிலிருந்து திருகோணமலை வரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, இந்தப் போராட்டம் இன்று இரவு 8.20 மணியளவில் திருகோணமலை சிவன் கோயிலடியில் நிறைவடைந்தது.
இதையடுத்து, நாளை காலை எட்டு மணிக்கு சிவன் கோவிலடியிலிருந்து முல்லைத்தீவை நோக்கி பேரணி பயணிக்கவுள்ளது.
இன்று தொடர்ந்த பேரணியில் மட்டக்களப்பில் வைத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து கொண்டதுடன் திருகோணமலைக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவை வழங்கியிருந்தனர்.
இதேவேளை, பிரதான நகர்களில் காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும், புலனாய்வாளர்களும் பிரசன்னமாகி பேரணிக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டவாறே இருந்தனர். அதுமட்டுமன்றி போராட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்களை இடையிடையே தடுத்து நிறுத்தி விசாரணைகளுக்கு உட்படுத்தியதோடு அச்சுறுத்தல்களையும் விடுத்திருந்தனர்.





