பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் முதல்வர் பழனிசாமி நாடகம் நடத்துவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தி.மு.க அரசியல் நாடகம் நடத்துவதாக, குற்றம்சாட்டியிருந்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அவர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நளினியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தவர் கருணாநிதியே என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பா.ஜ.கவுடன் கூட்டணி பேச்சு முடிந்து தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கும் முன்னர், ஒரு நிபந்தனையாக, ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என பா.ஜ.க அரசுக்கு அதிமுக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.