கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் வி சேட குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் டஸாக் (Peter Dassack) தனது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வுஹான் தீநுண்மி ஆயவகத்தின் துணை இயக்குநர் ஷி ஜெங்லி (Shi Zhengli) உள்ளிட்ட அந்த ஆய்வகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயிரியில் விஞ்ஞானிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், எங்கள் குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஷி ஜெங்லி (Shi Zhengli) உள்ளிட்ட விஞ்ஞானிகள் வெளிப்படையாக பதிலளித்து ஒத்துழைப்பு அளித்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.