கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 100 கோடி ரூபா, பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று கூடிய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி, விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம், 16 இலட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.