பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, சம்பள உயர்வுக்கான உரிமைப் போராட்டம் மற்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடைபெறும் யாத்திரை ஆகியன தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி நாளை மலையகம் தழுவிய ரீதியில் நடைபெறும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மலையக தொழிலாளர் முன்னணி ஏற்கனவே தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்படாமல் உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரண்டு காட்ட வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த முடிவை எடுத்தோம்.
ஆயிரம் ரூபா சம்பளம் மட்டுமல்லாது, கூட்டு ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள் மற்றும் சலுகைகளும் முழுமையாகக் கிடைக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகன எமது அழுத்தம் தொடரும் என்றார்.