சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிலங்காவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வளலாய் பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இதுவரை காலமும் அங்கு வசித்து வந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த பலாலி காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.