இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து, நெருப்பு குழம்பைக் கக்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ள எட்னா (Etna ) எரிமலை, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாகும்.
புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வரும் இந்த எரிமலை, கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியது.
தற்போது இந்த எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து ‘லாவா’ எனப்படும் நெருப்புக் குழம்பும், சாம்பலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
முன்னரே, சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும், இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து நெருப்பு சுவாலை வெடித்துக் கிளம்பும் ஆபத்தான அழகை தூரத்தில் இருந்தபடி கண்டு களிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.