பிற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் தலையீடு செய்வதை நிறுத்திக் கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ஆட்சி காலத்தில், ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்க இராணுவத்தை விலக்கிக் கொள்ளும் முடிவை எடுத்திருந்தார்.
அதேபோன்று, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகமும், யேமனில் சவுதி இராணுவப் படைகளுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், யேமனில் நடக்கும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், யேமனில் நடக்கும் போருக்கு அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவுகளும் திரும்பப் பெறப்படுவதாகவும், ஆயுத விநியோகமும் அதில் அடங்கியுள்ளது என்றும், தெரிவித்துள்ளார்.