வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நாளை சாலை மறியல் போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில், டில்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், நாளை பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து டில்லியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக விரோதிகள் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொய்யான தகவல் பரவுவதை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், ஏனைய மாநில காவல்துறையினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், டில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.